
சென்னை தி.நகர் பகுதியில் அதிகளவில் மக்கள் கூட்டம் இருப்பதால் காவல்துறை தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதற்காக அங்கு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை உஷார்படுத்துகின்றனர்.
மேலும், கூட்டத்தை ஒழுங்குப் படுத்தும் வகையில், அங்குள்ள முக்கியத் தெருக்களில் வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதனிடையே, தீபாவளிக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தி.நகருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தீபாவாளி நெருங்கிவிட்ட நிலையில், தி.நகர் பகுதியில் தயார் செய்யப்பட்ட ஆடைகள் அதிகளவில் விற்பனை ஆவதாக கூறப்படுகிறது.