ஜெய்பூர்-சென்னை அதிவேக தொடருந்து நேற்று இரவு உஜ்ஜைன் தொடருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொது பிரிவு தொடருந்து பெட்டியில் தீ பிடித்தது.
உடனே அந்த பெட்டியில் இருந்த பயணிகள் தொடருந்தின் அபாய சங்கிலியை இழுத்து தொடருந்தை நிறுத்தினர்.
தகவல் அறிந்ததும் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் தீ அணைக்கப்பட்டவுடன் தொடருந்து புறப்பட்டு சென்றது என்றும் வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
