
இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்தவாரம் கொழும்புக்கு வரவுள்ளார்.
இவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலராக உள்ள றொபேட் ஓ பிளேக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளவராவார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இலங்கை நிறைவேற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்கிறதா என்பது குறித்து ஆராயவே அவர் கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மீண்டும் அதிபராக ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இராஜாங்கத் திணைக்கள உயர்அதிகாரி ஒருவர் முதல்முறையாக இலங்கை வரவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.