
அவர் புறப்படும் முன்பு நிருபர்களிடம் கூறும்போது, தெற்காசிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக விரிவான நட்புறவை ஏற்படுத்தி ஆசிய பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டை வளப்படுத்தும் முயற்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இந்த மாநாட்டில் இடம்பெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் ஆசிய பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திர தன்மை மற்றும் மேம்பாடு ஆகியவை குறித்த விவாதம் இடம் பெறும் என்றார்.
மேலும், கிழக்காசிய மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்து பேசும் பிரதமர் மன்மோகன் சிங் சீன பிரதமர் வென் ஜியாபாவோவுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.