கம்போடியா நாட்டின் தலைநகரான நாம்பென்னில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 18 நாடுகளின் 7வது கிழக்காசிய மாநாடும், இந்தியா, புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்தியா-ஆசியான் 10வது உச்சி மாநாடும் நடக்கிறது.
இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக கம்போடியா சென்றுள்ளார்.
அவருடன் மத்திய வர்த்தக, தொழில் துறை மந்திரி ஆனந்த் சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் புலோக் சாட்டர்ஜி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.