
உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.பிரித்தானிய தமிழ் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும்.