திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தும் முடிவில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.
திவிநெகும சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதால், அது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையின் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
முன்னதாக, உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தாலும், கருத்து வாக்கெடுப்பை நடத்தி திவநெகும சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருந்தார்.
ஆனால், திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
இலங்கை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த நேற்று இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய போது, உயர் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் திவிநெகும சட்டமூலத்திற்கு கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவையில்லை.
அரசியலமைப்புக்கு முரணானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.