அண்மையில் திரைக்கு வந்த "துப்பாக்கி" படமானது மிக சிறப்பான வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வரும் நிலையில்,இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் மிகப் பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் விஜய்.
"துப்பாக்கி"' படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வரவழைத்திருந்தார் விஜய்.இயக்குனர் முருகதாஸ் உற்பட அத்தனை கலைஞர்களையும் அவர்களது சமூக வலைத்தளத்தின் ஊடாகவே அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிடையே இந்த விருந்தில் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார் விஜய்.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கப்போகும் அப்படத்திற்கு இன்னமும் பெயர் சூட்டப்படாத நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்புக்காக மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மிக விரைவில் பறக்க இருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.
இப்படத்திற்காக முதன்முதலில் விஜயுடன் ஜோடி சேரவுள்ளார் அமலா பால்.அத்தோடு சந்தானமும் இணையவுள்ள இப்படத்தை பற்றிய மேலதிக தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
