நீண்ட காலமாக தென்னிந்திய நடிகைகளில் அதிக காலம் நீடித்த நடிகை என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட நடிகை த்ரிஷாவின் படங்கள் என்றாலே தனிப் பெருமை உண்டு.
மிக அதிகளவிலான இரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள திரிஷா இதுவரை நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இதை ஒரு குறையாகவே பார்த்து வரும் இவருக்கு அப்படியானதொரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
அண்மையில் வெளியாகி இந்திய சினிமாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற வித்யா பாலன் நடிப்பில் உருவான " டர்ட்டி பிக்சர்" மற்றும் "கஹானி" போன்ற படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்திருந்தன.
அதேபோல், அனுஷ்கா நடிப்பில் வெளியான "அருந்ததி" படமும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படமே.இப்படமும் பொருளாதார ரீதியில் மிக பெரிய வெற்றியை கண்டது.
இதே மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட நடிகை த்ரிஷாவின் நீண்ட கால கனவு தற்போது நிறைவேறவுள்ளது. "ஒக்கடு","வர்ஷம்" மற்றும் "நுவோஸ்தானண்டே நிநோதந்தன" போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த எம்.எஸ்.ராஜுவின் தயாரிப்பில் உருவாகவுள்ள நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் த்ரிஷா.
அவர் நடிக்கவிருக்கும் இப்படம் அவரது சினிமா வாழக்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையவுள்ளது.