
மின்வெட்டு காரணமாக திருப்பூரில், அனைத்து வகை தொழில்களும் முடங்கியுள்ளன. இந்த பிரச்னையில் மத்திய- மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், சுமார் 18 மணி நேரம் மின்வெட்டைக் கண்டித்தும், அங்கு இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
மின் வெட்டுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பனியன் உற்பத்தியாளர்கள், விசைத் தறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.