Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரைக்கு வருகை தந்த கேரள அணு உலை எதிர்பாளர்கள் பழவூரில் கைது


இன்றைய தினம் இடிந்தகரையில் முற்றுகை போராட்டத்தின் போது கைதான மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க கேரள மாநிலத்தை சேர்ந்த கேரள இளைஞர்கள் இயக்க உறுப்பினர்கள் இடிந்தகரைக்கு வருகை தந்து அவர்களுக்கு உதவிகள் வழங்கி பின் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர்.

கேரளாவில் இருந்து வருகை தந்த கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்கள் திரும்பிச்செல்லும் போது காவல்துறையினர் கைது செய்து பழவூர் எனும் கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குழுவில் ஆண்களும் மற்றும் பெண்களும் ஆக 25 பேர் இருந்தனர்.

இவ்வாறு தமிழக காவல்துறையின் அட்டகாசம் தொடர்ந்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post