![]() |
விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? |
பாரீசில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2004-ம் ஆண்டு இறந்த யாசர் அராபத்தின் உடல், பாலஸ்தீனத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அரபுநாட்டு தொலைக்காட்சி ஒன்று கடந்த ஜூலையில் செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து கத்தாரைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று, அராபத்தின் உடமைகளை சுவிட்சர்லாந்து பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்ததில், அவர் பயன்படுத்திய பிரஷ் மற்றும் உள்ளாடையில், போலோனியம் என்ற விஷத் தன்மை காணப்பட்டதாக தெரிவித்தது.
இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காண அராபத்தின் உடலை வெளியே எடுத்து, ஆய்வு செய்ய பாலஸ்தீன அரசு முடிவு செய்தது. அதற்காக அவரதுகல்லறையை தோண்டும் பணிகள் துவங்கியுள்ளன. வரும் 27-ஆம் தேதி அவரது உடல் வெளியே எடுக்கப்படும் என்று விசாரணைக் குழுவின் தலைவர் டிராவி அறிவித்துள்ளார்.
உடல் எடுக்கப்படும் சமயத்தில் அதை படம் பிடிக்க ஊடகங்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை எடுத்து ஆய்வுக்கு தேவையான உறுப்புகளை மட்டும் எடுத்து விட்டு மீண்டும் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அரசு மரியாதையுடன் அராபத் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.