![]() |
Tulsi Gabbard |
அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் 2 இந்தியப் பெண்மணிகள் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் ஹவாலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துளசி கப்பார்டு. 31 வயதான இவர், ஈரான் போரில் பங்கேற்று போர் புரிந்தவர். இவர் தனது 21வது வயதில் ஹவாலி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, மிகவும் இளம் வயது எம்.எல்.ஏ. என்ற பெருமையுடன், சட்ட சபைக்குள் நுழைந்து சாதனை படைத்தார்.
இதேபோல் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு இந்தியர் டாக்டர் ஆமி பெரா (வயது 45). இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டான் லுங்கரன் என்பவரை குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இவருக்கு 50.1 சதவீதம் ஓட்டுகளும், லுங்கரனுக்கு 49.9 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.