![]() |
Israeli - Palestinian conflict remains active: More than 2 Lakhs people were displaced. |
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் ராணுவ அமைப்பின் மீது நேற்று முன்தினம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் ஆரம்பித்த முதல் நாள் மட்டும் 60 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரின் மீது வீசப்பட்ட குண்டு வெடித்ததில் ஒரு கமேண்டோ மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர்.
ராக்கெட் மூலம் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு பயந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடு உடைமைகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மூன்று நாட்களில் 150-க்கும் அதிகமான ராக்கெட்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.