தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துள்ள உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
சிறப்பான சினிமா மற்றும் அரசியல் பலத்தோடு, "குருவி" படத்தின் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த உதயநிதி,பல வெற்றிப் படங்களை இதுவரை தயாரித்துள்ளார்.
அவரின் தயாரிப்பில் உருவான "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் நாயகனாக தன்னை தரம் உயர்த்திய உதயநிதி அதிலும் வெற்றி கண்டார்.தொட்டதெல்லாம் துலங்கியது அவருக்கு.
தற்போது அவர் தயாரிப்பில் உருவாகியுள்ள "நீர்ப்பறவை" படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.அத்தோடு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் உதயநிதி.
இவ்வாறு பல முக நாயகனாக தன்னை உயர்த்திய வெற்றி நாயகன் உதயநிதியை வாழ்த்துவதில் அலை செய்திகள் பெருமை கொள்கிறது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலினுக்கு அலை செய்திகளின் திரைகடல் சார்பாக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.