வில்பத்து சரணாலயத்தில் வைத்து இலங்கை இராணுவத்தின் இரு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட
4 படையினரைக் கொன்றதாக குற்றம்சாட்டி, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக, வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வில்பத்து தேசிய பூங்காவில் 2007ம் ஆண்டு, குண்டு வைத்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும், சாலியபுர இலங்கை இராணுவ முகாமைச் சேர்ந்த கேணல் ஜெயந்த சுரவீர மற்றும் இராணுவ மேஜர் ஒருவர், இரு சிப்பாய்களைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வசாவிளானைச் சேர்ந்த ஐயன், கொண்டச்சியை சேர்ந்த சிவப்பிரகாஸ் சிவசீலன் ஆகிய இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கும் எதிராகவே அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.