Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிங் பிஷர் விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றுடன் முடிவு

கிங் பிஷர் விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது. நிர்வாகத்திற்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தத்தை கைவிட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

கிங் பிஷர் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒன்றாம் தேதி விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக கிங் பிஷர் அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, கிங் பிஷர் விமானங்களின் பறக்கும் உரிமமும் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிர்வாகத்திற்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பேச்சுவார்த்தையின் போது தீபாவளி பண்டிகைக்குள் 4 மாத சம்பள பாக்கியை வழங்க ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, மார்ச் மாத ஊதியத்தை 24 மணிநேரத்திற்குள்ளும், ஏப்ரல் மாத ஊதியத்தை இம்மாத இறுதிக்குள்ளும் வழங்க கிங் பிஷர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மே மாத ஊதியம் தீபாவளிக்குள் வழங்கப்பட இருக்கிறது. டெல்லியில் கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், கிங் பிஷர் உரிமையாளரும், சஹாரா ஃபோர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவருமான விஜய் மல்லையா, பார்முலா ஒன் பந்தயத்தின்போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இந்த பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார். அதனைத்தொடர்ந்து, பார்முலா ஒன் பந்தயத்தின்போது போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததை ஊழியர்கள் திரும்பபெற்றுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post