தமிழகம் எங்கும் மின்வெட்டு மிக அதிகமாகவே இருக்கும் காரணத்தால் பல வியாபர நிறுவனங்கள் மற்றும் கடைகள் என பலதரப்பட்ட வியாபார வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டு வருவதாக இருக்கிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அனுப்பர்பாளையம் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு நிகழ்த்துவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.
மற்றும் பாத்திர உற்பத்தி நிறுவன தொழிற்சாலைகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.