விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கனடாவில் நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான 12 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அவர்களை கொழும்புக்கு நாடுகடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், கனேடிய காவல்துறையின் புலனாய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கனேடிய எல்லைச் சேவைகள் முகவரமைப்புடனான ஆலோசனைகளை அடுத்து, கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவர்களை கொழும்புக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இவர்கள் அனைவரும் கனேடிய காவல்துறையினரால் ஒன்ராரியோ, கியூபெக், பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததுடன், ஆயுதங்களை வாங்க முயன்றதாகவும், சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட விசாரணைகளில், போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளை வைத்திருந்ததும், ஐரோப்பாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்ததும் உறுதியாகியுள்ளதாகவும் கனேடிய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.