
சென்னையில் வேலை பார்க்கும் வடநாட்டவர்கள் பற்றிய விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வந்தார் தமிழக முதல்வர் ஜெயா. ஆனால் அது வெற்றி அளிக்கவில்லை. மேலும் மனித உரிமை ஆர்வலர்கள் , இந்திய தேசியவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று கோஷமிட்டனர். அதனால் தமிழக அரசு வழக்கம் போல் பயந்தது.
ஆனால் இப்போது அதிரடியாக ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது கேரளா அரசு.
கேரளாவில் வேலை பார்க்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை மந்திரி திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வதன் மூலம் அவர்களின் பின்னணியையும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதையும் எளிதில் கண்காணிக்க கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த சட்டத்தை எதிர்க்க மத்திய அரசோ , அல்லது கேரளா மக்களோ முன்வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கேரளா அரசு திட்டதிட்ட தனி நாட்டை போலவே செயல்படுகின்றது. முல்லை பெரியாறு விடயம், அணு உலைகளை எதிர்க்கும் விடயம், மீனவர் படுகொலையில் காட்டிய அக்கறை போன்ற எல்லா விடயத்திலும் தான் ஒரு இறையாண்மை கொண்டே நாடாகவே செயல்படுகிறது கேரளா அரசு. இந்த புதிய சட்டத்தின் மூலம் கேரளாவில் குடியிருக்கும் பிற மாநிலத்தவரை பயமுறுத்தவோ , கண்காணிக்கவோ கேரளா அரசால் முடியும்.