Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட முக்கிய விருதுகள் (படங்கள்)



நோர்வே தமிழ் திரைப்பட விழா கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனருக்கான விருது போராளி திரைப்படத்திற்காக M சசிகுமார் அவர்களுக்கும், நடிகர் விஷால் அவர்களுக்கு அவன் இவன் திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான ஜூரி விருது வழங்கப்பட்டது.

அதே சமயத்தில் மயக்கமென்ன திரைப்படத்தில் சிறந்த நடிகைக்காக ஜூரி விருது ரிச்சா கங்கோதபாயவிற்கு வழங்கப்பட்டது.

இதில் வாகை சூடவா சிறந்த திரைப்படம் என பொத்தமாக 7 விருதுகளை தட்டிச்சென்றது.

சிறந்த இசையமைப்பாளர் விருது இளையராஜாவிற்கு அழகர் சாமியின் குதிரை திரைப்படத்திற்காகவும், அப்புக்குட்டி அவர்களுக்கு சிறந்த துணை நடிகர் விருதினை அழகர் சாமியின் குதிரை திரைப்படத்திற்காகவும், சிறந்த பாடலாசிரியர் விருதினை காசி ஆனந்தன் அவர்கள் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்காகவும், சிறந்த நகைச்சுவை நடிகர் விருதினை கஞ்ச கருப்பு அவர்களுக்கும் போராளி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.





[vuukle-powerbar-top]

Recent Post