மதுரை உத்தமபாளையத்தை சேர்ந்த சமையல் கலை நிபுணர் ஜேக்கப் (வயது 38). சமையல் கலையில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து சாதனை படைத்தவர்.
இவர் கடந்த 2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவுகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
தற்போது, சென்னை சிந்தாமணி நகரில் வசித்து வந்த இவர், தனியார் தொலைக்காட்சியில் ‘ஆகா என்ன ருசி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்.
பல்வேறு சமையல் கலை புத்தகங்களையும் எழுதியுள்ளார்.இந்த நிலையில், ஜேக்கப்புக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய அலைசெய்திகள் பிரார்த்திக்கிறது.
அவருடைய ஆத்மா சாந்தியடைய அலைசெய்திகள் பிரார்த்திக்கிறது.