பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போபாலில் நடந்த விழா ஒன்றில் விவேகானந்தரின் அறிவு திறனையும், தாவூத் இப்ராகிமின் அறிவு திறனையும் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசியலில் இருக்கும் ஒருவர் பொது இடங்களில் கருத்து தெரிவிக்கையில், கவனமாக இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தியாளர் ராம் மாதேவ் கூறுகையில், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கட்காரி விலகுவது என்பது அக்கட்சியின் விவகாரம். அதனை அக்கட்சியே கையாளும்.
இது குறித்து நாங்கள் எந்த ஒரு கருத்தும் சொல்வதற்கில்லை என்று தெரிவித்துள்ளார்.