விருதுநகர் தாலுகா அலுவலக கட்டுப்பாட்டில் 25 கிராம நிர்வாக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு அறிவித்தபடி தீபாவளி முன்பணம் ரூ.5 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 25 பேருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால் பில்தொகை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களுக்கு உரிய நேரத்தில் முன்பணம் கிடைக்கவில்லை.
இதனை கண்டித்து 25 கிராம நிர்வாக அதிகாரிகளும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகள் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் கிராம நிர்வாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.