
சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை ஓரம் ஒதுங்கிய பிரதிபா காவேரி கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.புயல் காற்று வீசிய சமயத்தில் கப்பலில் இருந்து உயிர் பிழைக்க தப்பியவர்கள் போது உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணையில் இது குறித்து கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் 9 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இதில் 6 பேர் பலியானது குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.