
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும், கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியிலும் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அணையின் பலம் குறித்து ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தது.