சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 30 இலங்கை இளைஞர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞர்கள் சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விசேட விமானம் மூலம் இலங்கைக்குத் நாடுகடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களிடம், அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்ட திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சட்டதிட்டங்களுக்கு அமைய செல்லுபடியற்ற விசா மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த இலைங்கையர்களது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்வருடம் ஒகஸ்ட் 13ம் திகதிக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து 156 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினர் நேற்றும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 47 பேரை கைது செய்துள்ளனர். இதுவரை இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற சுமார் 3,000 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.