
நேற்றுமுன்தினம் இலங்கை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பங்கு கொண்ட நிகழ்வு ஒன்றில், இங்குள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 பழக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
மெனிக் பாமில் இலங்கை இராணுவம் 10 ஏக்கரில் பழமரப் பண்ணையை நிறுவவுள்ளது.
இதே பகுதியில் பிறிமா நிறுவனத்துடன் இணைந்து இலங்கை இராணுவம் 225 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடும் பண்ணை ஒன்றையும் உருவாக்கவுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவம் வன்னியில் 2430 ஏக்கர் அரசகாணிகளைக் கைப்பற்றி, பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.