நீலம் புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்த கனமழையால் அதிக அளவில் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன.
மேலும் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் பல பகுதிகளில் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் ஆந்திர முதல்வர் கிரண் குமார் இன்று வெள்ள நிலவரங்களை பார்வையிட உள்ளார்.