மகிந்த ராஜபக்ச இந்தியா செல்கிறார் - ஆனால் மன்மோகனுடனான சந்திப்பு உறுதியாகவில்லை
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள போதிலும், புதுடெல்லியில் அவரது சந்திப்புகள் இன்னமும் உறுதியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், பௌத்த கற்கைகள் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவே மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார்.
இம்மாதம் 21ம் நாள், இலங்கை அதிபரும் பூட்டான் பிரதமர் லியொன்போ ஜிக்மி தின்லேயும் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
2600வது புத்த ஜெயந்தியை முன்னிட்டு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தலைவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவரது பயணத்திட்டம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
}இருந்தபோதிலும், புதுடெல்லிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச செல்வது பெரும்பாலும் உறுதி என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மகிந்த ராஜபக்ச இந்தியா செல்கிறார் - ஆனால் மன்மோகனுடனான சந்திப்பு உறுதியாகவில்லை
Reviewed by கவாஸ்கர்
on
09:44:00
Rating: 5