Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவில் இருந்து 43 தமிழ் அகதிகளுடன் சென்ற படகு 9 நாட்களாக நடுக்கடலில் தத்தளிப்பு


அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற போது படகு இயந்திரம் பழுதடைந்ததால் ஒன்பது நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 43 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தப் படகை மீனவர்கள் கண்டுபிடித்து, சுமாத்ராவுக்கு அப்பாலுள்ள மென்ராவை தீவுக்கு அருகே கொண்டு போய் விட்டதாக இந்தோனேசிய காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படகில் 4 பெண்களும், மூன்று சிறுவர்களும் இருந்தனர். ஒருவர் மாற்றுத் திறனாளியாவார்.

ஒன்பது நாட்களுக்கு முன்னர் இவர்களின் படகு இயந்திரம் பழுதடைந்து போனதால், உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதே மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நீரிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தம்மை கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டு செல்வதற்கு உதவும்படி, மென்ராவை தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளிடம் உதவி கோரியுள்ளனர்.

இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தலைமை தாங்கிச் சென்ற எவெங்காம் என்பவர் தகவல் வெளியிடுகையில்,

அவர்கள் தாம் இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடுவதற்காக கிறிஸ்மஸ்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ்தீவுக்கு எழுதிக் கொடுத்த கடிதம் ஒன்றில் தமக்கு குடிநீரும் 2000 லீற்றர் டீசலும் தருமாறு கேட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 8ம் நாள் இந்தியாவில் இருந்து புறப்பட்டதாகவும், டீசல் தீர்ந்து போனதால், 10 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினார்.

மீனவர்களின் உதவியுடன் செவ்வாய் காலையில் மென்ராவவை தீவுக்கருகே தாம் கொண்டு வந்து விடப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களுக்கு 10 கிலோ அரிசி, மரக்கறிகள், மென்பானங்களை வழங்கி விட்டு வந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.


[vuukle-powerbar-top]

Recent Post