சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அந்த படத்தை வெளியிடுவதிற்கு சில தடைகள் ஏற்ப்பட்டுள்ளன.
இயக்குனர் ரவி என்பவர் துப்பாக்கி என்ற படத்தலைப்பின் மீது தொடர்ந்துள்ள வழக்கே இத்தடைக்கு காரணம்.ரவி அவர்கள் கடந்த 2009 ஆண்டே தான் இயக்கிவரும் படத்திற்கு கள்ளத்துப்பாக்கி என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்ற பெயர் வைத்துள்ளதால் அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் ரவி.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இயக்குனர் ரவி அவர்களுக்கு கடந்த சில தினங்களாக தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் இயக்குனர் ரவி அவர்கள் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் அவர்களும் கலைப்புலி தானுவும் தனக்கு தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ரவி அவர்கள் நடிகர் கமலகாசனுக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தீர்ப்பு வெளிவந்த பின்னரே வெடிப்பது துப்பாக்கியா? அல்லது கள்ளத்துப்பாக்கியா? என்பது தெரியவரும்.
நன்றி - செய்தியாளர் பிரசாந்த்