பாக்டேரியோபேஜ் வைரஸ்கள் லித்தியம்-காட்மியம் வகை பேட்டரிக்குள் செலுத்தப்படுவதின் மூலமாக இயற்கையாக மின்சக்தி உண்டாகிக் கொண்டே இருக்கும். |
பாக்டீரியா உயிரிகளை உண்ணும் வைரஸ் நுண்ணுயிரியைக் கொண்டு கைபேசியை மின் சக்தி ஏற்றும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த கண்டுபிடிப்பின் சாதனையாளர்கள். M 13 பாக்டீரியோபேஜ் (M13 Bacteriophages) எனும் வைரஸ்கள், பாக்டீரியாக்களை உண்ணும் பண்புடையவை. அவை, உண்ணும்போது மின் சக்தி வெளிப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இயந்திர சக்தியை மின்சக்தியாக மாற்றும் தன்மையை மையமாக இந்த வைரஸ் கொண்டுள்ளது.
இதன் மூலம், நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் கைபேசி மின்சக்தியை ஏற்றிக் கொண்டே இருக்கும். இதற்காக லெட்-காட்மியம் பேட்டரி பயன்படுத்தப் படும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.