ஈழத்தமிழர் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு மம்தா பனர்ஜி அமெரிக்காவுக்கு கோரிக்கை



ஈழத்தமிழர்களின் தீர்வு விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பனர்ஜி அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் நேற்று மம்தா பனர்ஜியைச் சந்தித்தார்.

அதன்போதே, மம்தா மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள ஹிலாரி கிளின்டன், ஈழத்தமிழர் விடயத்தில் அமெரிக்கா மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்தி வருவதாகவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடன் இவ்விடயம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.