அல் - கைய்தா இயக்கத்தின் தலைவர் பாகிஸ்தானிலேயே உள்ளார் - ஹிலரி கிளிண்டன்



அல் - கைய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவர் அல் ஷவாஹிரி பாகிஸ்தானிலேயே உள்ளதாக அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பாகிஸ்தான் போதுமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அல் - கைய்தா இயக்கத்தினை செயலிழக்கச் செய்ய வேண்டியுள்ள போதிலும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் தற்போதும் செயற்படுவதாக ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார்.

இந்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹலரி கிளிண்டனின் இந்த கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.