கையடக்க தொலைபேசியில் பேசும் நேரத்தின் தொகை இரு மடங்காக உயருகிறது



மொபைல் போனில் பேசும் நேரத்தின் தொகையை இருமடங்காக உயர்த்த சில மண்டலங்களுக்கு டிராய் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலை சந்தித்த பின் பாரதி ஏர்டெல் டெலிகாம் நிறுவன முதன்மை அதிகாரி சஞ்சய் கபூர் கூறும் போது, 

இந்தியாவின் ஒரு மண்டலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விலை 7 கோடி ரூபாயாக இருக்கும் போது. மற்ற இந்திய பெருநகரங்களில் அதன் விலை 717 கோடி ரூபாயாக உள்ளது. இவை நூறு மடங்கு விலை வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.