1.5 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு இந்திய தூதரக அதிகாரியின் மகள் வழக்கு



அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிபவர் தேபாஷிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கீர்த்திகா பிஸ்வாஸ் (வயது 18).

இவரது ஆசிரியருக்கு ஒழுக்கக்கேடான மின்னஞ்சல்களை அனுப்பியதாக கீர்த்திகா பிஸ்வாஸ் மீது கூறப்பட்ட புகாரின்பேரில் நியூயார்க் போலீசார் கைது செய்து ஒரு நாள் சிறையில் வைத்தனர்.

சிறைக்கு சென்றதால் அவர் படித்த பள்ளி நிர்வாகம் கீர்த்திகா பிஸ்வாஸை நீக்கியது.

இந்நிலையில், நியூயார்க் போலீசார் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் 1.5 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கீர்த்திகா பிஸ்வாஸின் சார்பில் அவரது வழக்கறிஞர் ரவி பத்ரா நியூயார்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.