Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசியலில் குதிக்க இருக்கும் டோனி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா அமைப்பு தீவிரமாக பரிசீலனை செய்துவருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தொடக்கத்திலிருந்தே சுவாரசியங்களையே சந்தித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் தமது வேட்பாளரை நிறுத்தாமல் லண்டன் தொழிலதிபரை ஆதரிக்கப் போவதாக அறிவித்தது. இது அந்த கட்சிக்குள்கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. வேறுவழியின்றி யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறி ஒருவழியாக சமாளித்தது பாஜக.

ஜார்க்கண்ட் தேர்தலில் சுயேட்சையாக தொழிலதிபர்கள் களமிறங்கினர். தேர்தல் நாளில் அங்கும் இங்குமாக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவைத் தேர்தலையே ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தற்போது புதியதாக நடைபெற உள்ள தேர்தலும்கூட சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லை என்ற ரீதியில்தான் போய்க் கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா நேற்று தமது மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. பேசாமல் கிரிக்கெட் கேப்டன் டோனியை நிறுத்திட்டா என்னன்னும் யோசிச்சிருக்காங்களம்..

மண்ணின் மைந்தனான டோனிதானே உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்.. அவருக்கு சிறப்பு செய்தால் என்ன? என்பதுதான் அந்த கட்சியின் கேள்வி..
[vuukle-powerbar-top]

Recent Post