Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய பிரதிநிதிகள் மத்தியஸ்தர்கள் இன்றி தமிழர்களை சந்திக்க வேண்டும் -

இலங்கைக்கு வரும் இந்திய எதிர்க் கட்சிகள் அடங்கிய குழுவினர் மத்தியஸ்தர்கள் யாரும் அற்ற நிலையில் நேரடியாக தமிழர்களைச் சந்திக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளர்.

தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகயை மதிப்பிட ஏப்ரல் 16 இருந்து ஒரு வாரத்திற்கான பயணத்தை இந்திய எதிர்க் கட்சிகள் குழு மேற்கொள்ளவுள்ளது.

மதுரையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிக் கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அங்கு மேலும் பேசிய சிறிதரன்,

இந்தியா தமிழர்களுக்கு 50,000 வீடுகளை அமைக்க உதவி செய்திருந்த போதும் அவற்றில் 1000 வீடுகள் தான் கட்டப்பட்டிருக்கிறது என அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை 40,000 தமிழர்கள் இன்னும் தண்ணீர் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

செட்டிக்குளம் அகதி முகாமில் உள்ளவர்கள் முள்ளிவாய்க்காலை சொந்த இடமாகக் கொண்டவர்கள். இவர்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.

இலங்கை அரசு தமிழர் பிரதேசத்தில் அவர்களது விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்காக சிங்கள மக்களை தொடர்ந்தும் குடியமற்றி வருகிறது எனவும் அவர் சிறிதரன் குற்றஞ் சுமத்தினார்.
[vuukle-powerbar-top]

Recent Post