தமிழக சட்டபேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டபேரவை வளாகத்தில் எதிர்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையை மாற்றம் செய்ததற்கு தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேரவையில் பேசவும் அவர்கள் அனுமதி கேட்டனர். இதற்கு பதலளித்த சபாநாயகர் ஜெயகுமார், இது பேரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதில் தான் தலையீட முடியாது என்றும் கூறினார். மேலும் இது குறித்து அவையில் பேசவும் தேமுதிகவினருக்க அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்து தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.