அலெக்சை தொடர்ந்து ஓடிசவில் காவல்துறை அதிகாரி கடத்தல்



ஒடிசா மாநிலத்தில் இன்று போலீஸ் அதிகாரி ஒருவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். 

அவரது பெயர் கிருபாராம் மஜ்கி. இன்று நண்பகல் நவுபடா பகுதியில் இருந்து 10 மாவோயிஸ்டுகள் அவரை கடத்தி சென்றனர். 

மாவோயிஸ்டுகள் இத்தாலியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளை கடத்தி வைத்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். 

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை கடத்தி சென்று 12 நாட்களுக்கு பின் விடுவித்தனர். 

தற்போது 3 வது முறையாக போலீஸ் அதிகாரியை கடத்தி உள்ளனர்.